நவம்பர் 22 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர் 22, 2013) பிபிசி தமிழோசையில்
பிரபல இலங்கை தமிழ்க் கவிஞரும், நடிகருமான வ ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசையின் வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத ஆட்கள் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தியதாக வந்திருக்கும் புகார்கள் குறித்த செய்திகள்;
இலங்கையின் போரில் கணவனை இழந்த விதவைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு லட்சத்தை தொடுவதாக இன்று நடந்த விதவைகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக போராடுபவர்கள் குறித்து பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் முரளிதரனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கைக்கு சென்ற பிரிட்டிஷ் பிரஜையை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு இன்று நீதிமன்றத்தில் பிணை அளிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி மிகப்பெரிய பின்னடைவை அடைந்திருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்; ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி அமெரிக்காவில் கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மரணம் தொடர்பில் இன்றும் நீடிக்கும் மர்மம் குறித்த அலசல் அகியவற்றை கேட்கலாம்.
