நவம்பர் 29 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 29, 2013, 06:50 PM

Subscribe

இன்றைய (நவம்பர்,29,2013) பிபிசி தமிழோசையில்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் வழக்கறிஞர் அடையாளம் காட்டியிருப்பது குறித்த செய்திகள்;

பெண் பத்திரிக்கையாளரால் பாலியல் புகார் சுமத்தபட்டுள்ள தெஹெல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று கோவா சென்று உள்ளூர் காவல்துறையின் முன் ஆஜராகியிருப்பது குறித்த செய்திகள்;

திருமண உறவுக்கு வெளியே தாம்பத்திய உறவு வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, வீட்டுக்குள் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கெதிரான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் , எந்த ஒரு பாதுகாப்பும் தரமுடியாத நிலை இருக்கிறது, இதில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்திருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

திருகோணமலை குவாடலூபே தேவாலய பங்குத் தந்தைக்கு புலனாய்வுத் துறையினர் எனக் கூறிக்கொண்டவர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்த செய்தி;

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அனுட்டிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பலர் கைதாகியுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் அணிந்து செல்லக்கூடிய தங்க ஆபரணங்களின் அளவுக்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையில் பவுத்த பிக்குகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் கூறுமாறு நீதிமன்றம் போக்குவரத்து விதிகளுக்கான அதிகாரிகளிடம் கோரியுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றை கேட்கலாம்.