நவம்பர் 30 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர் 13, 2013) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றவேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக இருப்பதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னையில் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை கடற்படையினருக்கு சிறப்புப் பயிற்சியளிக்கப் போவதாக இந்திய கப்பற்படை தலைமை அதிகாரி தெரிவித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருக்கிறது;
இலங்கையின் வடகிழக்கில் இந்துக்களின் மதஉரிமைகள் பறிக்கப்படுவதாக இந்து மாமன்றம் குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;
இந்த குற்றச்சாட்டு குறித்து இலங்கை ராணுவத்தின் மறுப்பு;
இலங்கையில் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்று அமைக்கவேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்திகள்;
சீனாவில் இருக்கும் கடூழிய முகாம்களை மூடுவதற்கு அந்நாடு சமீபத்தில் முடிவு செய்திருக்கிறது. இதன் பின்னணியை அலசுகிறார் பிபிசியின் மார்ட்டின் பேடியன்ஸ். தமிழில் தருகிறார் பூபாலரட்ணம் சீவகன்.
நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
