'முஸ்லிம் மாணவிகள் நிக்காப் அணியக் கூடாது': மொறட்டுவை பல்கலை. துணைவேந்தரிடம் தமிழோசை கேள்வி

Dec 02, 2013, 12:21 PM

Subscribe

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான, மொறட்டுவையில் அமைந்துள்ள மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் நிக்காப் அணியமுடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.கே.டபிள்யூ. ஜயவர்தன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நிக்காப் அணிவதற்கு அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மாணவிகள் இருவர் விடுத்த வேண்டுகோளை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்துவிட்டதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.