டிசம்பர் 04 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (டிசம்பர் 4, 2013) பிபிசி தமிழோசையில்
ஏசிஎப் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் இலங்கை மூதூரில் இலங்கை பாதுகாப்பு படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் இதற்கு சர்தேச விசாரணை தேவை என்று அந்நிறுவனம் கோரியிருப்பது குறித்து அந்நிறுவனத்தின் கருத்துக்கள்;
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இலங்கை குறித்த சர்வதேசப் பொறுமை குறைந்துபோகும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கைக்கு சென்றுள்ள ஐநாவின் சிறப்புத் தூதர் சாலோக்கா பெயானி தமது இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றபோது மக்கள் அவரிடம் வைத்த கோரிக்கைகள் குறித்த செய்திகள்;
இலங்கை அரசு அதிகாரிகள் தமிழ் மொழிகற்கவேண்டும் என்பதற்கு பொதுபல சேனா எதிர்ப்பு தெரிவித்திப்பது குறித்த செய்தி;
இரவு நேரத்தில் சந்தேகநபர்களை கைது செய்யும் காவல்துறையினர் கடைபிடிக்கும் அளவுகோள்களை தலைமை நீதிபதி விமர்சித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கைக் கடற்பரப்பினுள் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்வர்களில் 3 மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களை விரைவாக விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இந்தியாவில் இன்று நடந்துமுடிந்திருக்கும் ஐந்துமாநில தேர்தல்கள் குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டில் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு இன்று நடந்து முடிந்த இடைத்தேர்தல் குறித்த செய்திகள்;
தென்னிந்தியாவில் உள்ள புலிகள் சரணாலயம் ஒன்றில் மூன்றுபேரைக் கொன்ற ஒரு புலியை சுட்டுக் கொல்லுமாறு அந்த சரணாலயத்தின் தலைமை வன அதிகாரி உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி குறித்த அலசல் ஆகியவற்றை கேட்கலாம்.
