டிசம்பர் 07 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 07, 2013, 05:32 PM

Subscribe

இன்றைய (டிசம்பர்.7 2013) பிபிசி தமிழோசையில்

உலக வர்த்தக நிறுவனத்தில் கலந்துகொண்ட 160 நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்படுத்தியிருக்கும் புதிய சர்வதேச ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

மன்னார் மாவட்டம் பொன்கண்டல்தீவு பகுதியில் இரண்டு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பதட்ட நிலைமை குறித்த செய்திகள்;

இலங்கையில், நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்திருந்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, அங்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் பழிவாங்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது இலங்கை வந்திருக்கும் அமெரிக்க செனட் சபை பிரதிநிதிகளை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் அவர்களின் பேட்டி;

வட மாகாண சபை தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலுள்ளவர்களிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாக ஆர்வம் குறைந்து வருவதாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பா.அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளது குறித்த செய்திகள்;

அரியநேதிரனின் இந்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் கருத்துக்கள்;

மறைந்த நெல்சன் மண்டேலாவிடமிருந்து உலகநாடுகளின் அரச தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்பது குறித்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கருத்துக்கள்;

மண்டேலாவை முன்வைத்து உலகு தழுவிய இசைத்துறையில் உருவான ஆதிக்க எதிர்ப்பிசை மரபின் சில கூறுகள்டங்கிய இசையஞ்சலி ஆகியவற்றை கேட்கலாம்.