டிசம்பர் 11 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 11, 2013, 04:49 PM

Subscribe

இன்றைய (11-12-2013) பிபிசி தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

ஒருபால் உறவு குற்றச்செயல் என்று கூறும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு சரியே என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு குறித்த செய்திகள்;

இன்றைய தீர்ப்பு குறித்து ஒருபால் உறவாளர்களின் கருத்துக்கள்;

ஒருபால் உறவு குற்றச்செயல் என்கிற இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாலியல் மருத்துவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் கருத்துக்கள்;

ஒருபால் உறவு இந்திய, தமிழர் மரபில் என்னமாதிரி பார்க்கப்படுகிறது என்பது குறித்து தமிழ் எழுத்தாளர் டி ரவிக்குமாரின் செவ்வி;

இலங்கை கடற்படையால் 110 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

மன்னார் பொன்தீவுகண்டல் காணி பிரச்சினை காரணமாக முப்பதுக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்படும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும் என்று இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை ஆயர்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்தி;

பலகணியில் இந்தியாவில் அதிகரித்துவரும் குணப்படுத்த முடியாத காசநோய் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.