டிசம்பர் 13 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 13, 2013, 05:33 PM

Subscribe

இன்றைய பிபிசி (13-12-2013) தமிழோசையில்,

இலங்கையில் காணமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படுமென வடகிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையில் வடமாகாணசபையின் நிர்வாக விவகாரத்தில் மத்திய அரசு அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டிருந்த யாழ் மீறிஷுவில் மனித புதைகுழி சம்பந்தமான வழக்கின் விசாரணாயை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது குறித்த செய்திகள்;

கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் தரைகளில் விடப்படும் கால்நடைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்த செய்திகள்

நியுயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரை அமெரிக்கா கைது செய்தது ஏற்க முடியாத நடவடிக்கை என்று இந்தியா வர்ணித்துள்ளது குறித்த செய்திகள்;

மாதவிலக்கு நின்ற பிறகு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் அதிகபட்ச சாத்தியமுள்ள பெண்களில், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைக்கவல்ல மாத்திரை குறித்த ஆய்வின் முடிவுகள் குறித்த செய்திக் குறிப்பு;

ஊனமுற்ற குழந்தைகளால் தீமை நடக்கும் என்று நம்பிக்கையில் அத்தகைய குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் கானாவில் இருந்து வருவது குறித்த செய்திப்பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.