டிசம்பர் 14 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (14-12-2013) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மின்னணு தேசிய அடையாள அட்டையில் மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் இருக்கக் கூடாது என்கிற ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தரவுக்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு குறித்த செய்திகள்;
இலங்கையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநா உடன்படிக்கையை உள்நாட்டு சட்டமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது குறித்த செய்திகள்;
அரசாங்க அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரணை செய்யும் போது ஊழல் விசாரணை ஆணைக்குழு பக்கச்சார்பாக சேட்ப்டுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்த செய்திகள்;
இலங்கையில் தமிழ் கல்வியின் நிலை குறித்த ஆய்வு;
மறைந்த நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்க சமூகத்திற்கு மாபெரும் பங்களிப்பை செய்துள்ளார் என்கிற பாராட்டுக்களுக்கு மத்தியில் வெள்ளை இனவெறி அரசு முடிவுக்கு வந்ததில் இருந்து பதவியில் இருக்கும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசு அந்நாட்டில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவில்லை என்று எழுந்துள்ள விமர்சனம் குறித்த பெட்டகம்;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
