டிசம்பர் 18 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 18, 2013, 06:13 PM

Subscribe

இன்றைய (18-12-2013) பிபிசி தமிழோசையில்,

அமெரிக்காவில் பணியில் இருக்கும் இந்திய துணை தூதர் தேவயானி கோப்ராகடேவை அமெரிக்க அரசு அவமானப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய அரசு, அவரை ஐ.நா.வுக்கான நிரந்திர பிரதிநிதிகளில் ஒருவராக நியமித்துள்ளது குறித்த செய்திகள்;

இந்தியா அமெரிக்கவுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் ராஜீய உறவிலான மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த அலசல்;

கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தூத்துக்குடி அருகே சிறைப்பிடிக்கப்பட்ட சீ மேன் கார்ட் கப்பல் பணியாளர்களின் ஜாமீன் மனுக்கள் இன்று புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவால் நிராகரிக்கப்பட்ட்து குறித்த செய்தி;

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் வாதாடியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனின் செவ்வி;

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றை கேட்கலாம்.

இலங்கையின் தென்பகுதி மீனவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து, இதில் கலந்துகொண்ட தேசிய மீனவ இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் பிரான்ஸிஸ் ராஜன் அவர்களின் செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்.