டிசம்பர் 21 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 21, 2013, 07:04 PM

Subscribe

இன்றைய (21-12-2013) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப வெளிநாடுகளிடம் தீர்வு தேடாமல் உள்நாட்டுத் தீர்வுத் திட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த அழைப்புக்கு சம்பந்தனின் பதில்; முஸ்லிம் மக்கள் பெரும்பான்மயாக வசித்து வரும் மாலிகாவத்த பிரதேசத்தில் இடித்து அகற்ற படவுள்ள வீடுகள் சட்ட விரோதமானவை என்று அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புகாரொன்றை பதிவு செய்துள்ளது குறித்த செய்தி;

இந்தியாவின் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெயந்தி நடராஜன் திடீரென பதவி விலகியுள்ளது குறித்த ஒரு அலசல்;

தெற்கு சூடானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போர் நகரை, முன்னாள் அதிபருக்கு விசுவாசமான கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், அதனை மீண்டும் கைப்பற்ற அந்நாட்டு இராணுவத்தினர் முயன்றுவருவது குறித்த செய்தி;

போலியோ நோய் பரவும் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வரும் நிலையில் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அவற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கொல்லப்படுவது ஏன் என்பதை ஆராயும் பெட்டகம்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்