டிசம்பர் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 24, 2013, 04:44 PM

Subscribe

இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு விடுத்த அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள், இலங்கை மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ் கரலியத்த பதவி விலக வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரியுள்ள விபரங்கள்.

தமிழகத்தில் ஆதி திராவிடர்கள் நலப் பள்ளிகளின் நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்த தகவல்கள்

ஏ கே 47 ரக துப்பாக்கி இலங்கை உட்பட உலகளவில் எப்படி ஆளுமை செலுத்தியது என்பது குறித்த தகவலும், விடுதலைப் புலிகள் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான ராகவனின் பேட்டியும், அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்.