டிசம்பர் 25 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-12-2013) பிபிசி தமிழோசையில்
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து, இராணுவநிலைகளை புகைப்படம் எடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கைது செய்திருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கை மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பான அரச விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கூலிப்படையினராலே படுகொலை செய்யப்பட்டார் என்றும் அந்த கொலைவழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி, போர்க்கால இழப்புகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நிராகரித்திருந்த நிலையில் இந்தக் கணக்கெடுப்பின் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்தும், அதன் மீதுள்ள சந்தேகங்கள் பற்றியும் கணக்கெடுப்பை நடத்திய இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;
ஆசியாவில் கடந்த காலங்களில் பலவிதமான சவால்களை எதிர்கொண்ட பல நாடுகளில் நத்தார் இந்த ஆண்டு அங்குள்ள மக்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு;
நிறைவாக பலகணியில், பழிவாங்கும் நோக்கில் பாலியல் படங்களை வெளியிடும் போக்குபற்றிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
