டிசம்பர் 28 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 28, 2013, 06:12 PM

Subscribe

இன்றைய (28-12-2012) பிபிசி தமிழோசையில்

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று, இராணுவநிலைகளை புகைப்படம் எடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் மஹா தமிழ் பிரபாகரன் இன்றுமாலை இந்தியா திருப்பியனுப்பப் பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடமேற்கே வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை ஒட்டிய மாந்தை சந்திக்கருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனிதப்புதைகுழியைத் தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் பால்மாவுக்கு விலை உயர்த்த அரசின் அனுமதியைக் கோரியுள்ள நிறுவனங்கள், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் நிலையிலேயே பால்மா கையிருப்புகளை பதுக்கிவைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

இந்திய தலைநகர் டில்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் குறித்த திறனாய்வு

சீனாவில் '' ஒரு குழந்தை'' திட்டத்தை தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் சாதக பாதகங்களை அலசும் ஆய்வுக்கண்ணோட்டம்;

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.