ஜனவரி 1 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (1-1-2014) பிபிசி தமிழோசையில் இலங்கை சென்றுள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை சந்தித்து பேசியுள்ள மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத்தந்தை இமானுவேல் ஜெபமாலையின் செவ்வி;
இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள மசூதியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளந் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டத்தில் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கூறியிருப்பது குறித்த செய்திகள்;
இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவித்திருப்பது குறித்த செய்தி;
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு இருமுறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இளம் பெண் இறந்துவிட்ட சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் துவக்கி வைத்திருப்பது குறித்த செய்தி;
டில்லி மாநில முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், டில்லி மக்களுக்கு ஒரு நாளைக்கு 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக அளிக்கப்படும் என்கிற தனது தேர்தல் உறுதிமொழி நடைமுறைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இவரது இந்த முன்னெடுப்பு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியப்படும் என்பது குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி வேலை செய்வதற்கு இருந்த தற்காலிகத் தடை இன்றோடு முடிவுக்கு வருகிறது. இது குறித்து பிபிசியின் செய்தியாளர்களின் செய்தித்தொகுப்பு ஆகியவற்றை கேட்கலாம்.
