ஜனவரி 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைக் கமிஷன் தலைமைப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்திருப்பது பற்றிய செய்தி
வருமான வரி மற்றும் பெரு வணிக வரியை அறவே ஒழித்துவிட்டு, பொருட்கள் பரிவர்த்தனை வரி என்ற வரியை அறிமுகப்படுத்தலாம் என்று பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருக்கும் யோசனை பற்றி ஒரு பேட்டி
நீலகிரியில் வன விலங்கால் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அங்குள்ள வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர் தெரிவிக்கும் கருத்து
திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் கூட்டணி விஷயத்தில்கட்சி தலைமையின் கருத்துக்கு மாறாக கருத்துக்களைக் கூறியதற்காக தனது மகன் மு க அழகிரியைக் கண்டித்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் நாணயங்கள் பற்றாக்குறை சமாளிக்க மத்திய வங்கி எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை பற்றிய குறிப்பு
ஆகியவையும்
பின்னர்
அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியும் கேட்கலாம்
