ஜனவரி 8 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-01-2014) பிபிசி தமிழோசையில்,
அமெரிக்க அரசு இலங்கையில் , போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்பு சுமத்துவதிலும், நல்லிணக்கத்தை எட்டுவதிலும் போதிய முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கும் நிலை குறித்து தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பது குறித்த செய்திகள்;
அமெரிக்க அரசு இலங்கையில் , போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் என்று கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் செவ்வி;
இலங்கை வந்துள்ள சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாள்கின்ற அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே. ரெப் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநதிகளைச் சந்தித்துள்ளது பற்றிய செய்திகள்;
காணாமல் போன ஊடகவியலாளர் ஏக் நெலகொடா தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் உத்தரவு குறித்த செய்திகள்;
சென்னை நீலாங்கரைப் பகுதியில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு 16 வயது நபர், அங்கே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்த செய்திகள்;
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த செய்தித்தொகுப்பு
அடுத்து அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் உறையவைக்கும் குளிர் குறித்த நிலைமைகள் குறித்த நேரடி தகவல்கள் ஆகியவற்றை கேட்கலாம்.
