துப்பாக்கி பாதுகாப்பை தராது

Jan 10, 2014, 02:53 PM

Subscribe

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தொழிற்சாலை அரை கிலோவுக்கு குறைவான எடை கொண்ட ஒரு கைத் துப்பாக்கியை பெண்கள் பயன்பாட்டுக்கென தயாரித்துள்ளது.

இந்த துப்பாக்கியின் விலை 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவுக்கு இருக்கும்.

பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்கள் தம்மை காத்துக் கொள்ள இது உதவும் என்று துப்பாக்கியை தயாரித்த தொழிற்சாலை கூறுகிறது.

ஆனால் பயிற்சியற்றவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதால் எதிர்மரையான விளைவுகளே ஏற்படும் என்கிறார் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜி.திலகவதி. அவரின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்