ஜனவரி 11 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-01-2014) பிபிசி தமிழோசையில்
இன்று காலமான இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோனின் அரசியல் வாழ்வு பற்றிய ஒரு திறனாய்வுக்கண்ணோட்டம்;
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விஜயகாந்தை சந்தித்து வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியமாநிலமான ஒரிசாவில் இருக்கும் நியாம்கிரி மலையில் உள்ள சிறிய பழங்குடியின சமூகம் ஒன்று தாம் வாழும் மலைப் பகுதியில் உள்ள அல்மினிய தாதுப்பொருளை மிகப் பெரிய ''இந்திய - பிரிட்டிஷ்'' சுரங்க நிறுவனம் அகழ்வதை தடுத்து நிறுத்தியுள்ளது பற்றி பிபிசியின் அண்ட்ரூ நோர்த் வழங்கும் பெட்டகம்;
இலங்கையில் 2011-ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரஜை குர்ராம் ஷேய்க் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை மீண்டும் கைதுசெய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று நாட்களான நிலையில் அவரை தேடும் பணியின் நிலைமைகள் குறித்த செய்திகள்;
தமிழரசுக் கட்சியின் பொறுப்பில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்த அலசல்;
நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
