ஜனவரி 15 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-01-2014) தமிழோசையில்,
இந்தியா வந்துள்ள இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு இலங்கையில் பிடிபட்டுள்ள இந்திய மீனவர் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியா சென்றுள்ள இலங்கை மீன்பிடி அமைச்சரின் முடிவை விமர்சித்திருக்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளரின் செவ்வி;
இந்திய தலைநகர் டெல்லியில், ஒரு டென்மார்க் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த செய்திகள்;
இந்தியாவின் முன்னாள் நீதிபதி சுவதந்தர் குமார் மீதான பாலியல் புகார் குறித்த வழக்கில் அந்த புகாருக்கு பதிலளிக்க அவருக்கு நான்கு வார கால அவகாசம் கொடுத்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதராக இருந்த தேவயானி கோபர்கடே , தனது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸுக்கு, அமெரிக்க விதிமுறைகளின் படி சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது இரு நாட்டு உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய ராஜிய அதிகாரிகள், வெளிநாடுகளில் பணியமர்த்தப்படும் போது, அவர்கள் சொந்த வேலைகளைச் செய்ய வேலைக்காரப் பெண்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் கலாசாரத்தை தவிர்க்கக் கூடாதா என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறையின் ஓய்வு பெற்ற செயலர் என்.ரவியின் செவ்வி;
பர்மாவின் ராணுவம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவை தனது ஆயுதங்களில் ஒன்றாக பயன்படுத்துவதாக, அங்குள்ள பெண்கள் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்தி;
நிறைவாக பலகணியில் ஆப்பிரிக்காவில் பெருகிவரும் இஸ்லாமியத் தீவிரவாதம் தோற்றுவித்துள்ள கவலைகள் குறித்து பிபிசியின் மார்க் டாயல் அனுப்பிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
