ஜனவரி 17 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-01-2014) தமிழோசையில்,
விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இலங்கையின் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்கும் வகையில் பிரித்தானிய தனியார் இராணுவ பயிற்சி நிறுவனமொன்று இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சிகொடுக்க பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்திருந்த்து தொடர்பான சர்ச்சை குறித்து ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியும் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான பகுப்பாய்வாளருமான கர்ணல் ஹரிஹரனின் செவ்வி;
சம்புர் பிரதேசத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டத்திற்காக காணிகள் நில அளவை செய்யப்பட்டுள்ளதால் அந்த பிரதேச மீள்குடியேற்றம் கேள்விக்குறியாக மாறியிருப்பதாக எழுந்துள்ள அச்சங்கள் குறித்த செய்திகள்;
கொழும்பு, வனாத்தமுல்ல பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்து அகற்றுவதற்கு அரசு எடுத்துள்ள முடிவை எதிர்த்து மக்கள் தாக்கல் செய்துள்ள மனு இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள்;
இலங்கைப் போர்க்காலத்தில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம் ஒன்று முதல் முறையாக வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை தருகிறார் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம்.
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார குழுதலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சியின் வாக்குறுதிகள் சிலவற்றை இன்று அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாதது ஏன் என்று கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகனின் செவ்வி;
ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று ஆராயும் பிபிசியின் மைக் ஊல்ரிட்ஜ்ஜின் செய்திக்குறிப்பு ஆகியவற்றை கேட்கலாம்.
