ஜனவரி 18 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 18, 2014, 04:55 PM

Subscribe

இன்றைய (18-01-2014) பிபிசி தமிழோசையில்,

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இன்று வடக்கே கிளிநொச்சியில் தனது விசாரணைகளை ஆரம்பித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் பால்மா நிறுவனங்கள் தொடர்ந்தும் பெருமளவு பால்மா கையிருப்புகளை பதுக்கிவைத்து அதன் மூலம் விலையை அதிகரிக்க முயல்வதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;

ஜனவரி 20 ஆம் தேதி நடக்கவிருந்த இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பது குறித்த செய்திகள்;

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தம்மைப்போன்ற வடபகுதி மீனவர்கள் அழைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருக்கும் வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட பிரதிநிதி நூர் முகம்மட் முகம்மட் ஆலமின் கருத்துக்கள்;

நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய அமைச்சர் சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் இறுதிக்கிரியைகள் இன்று நடந்து முடிந்திருக்கும் நிலையில் அவரது மரணம் ஏற்படுத்திய சர்ச்சை குறித்த செய்திகள்;

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகளின் வன்செயல்கள் கட்டுக்கடங்காமல் போகும் ஆபத்தை எட்டியுள்ளதை பிபிசி குழு நேரில் சென்று பார்த்துள்ளது. அவர்கள் வழங்கும் நேரடி கள நிலவரம் குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.