ஜனவரி 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 19, 2014, 05:24 PM

Subscribe

இலங்கையின் வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் வேளையில், இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள விஷயங்கள்.

வட மாகாண சபையில் தலைமைச் செயலர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்று ஆளும் கூட்டணி கோரியுள்ளது ஏன் என்பது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கும் காரணங்கள்.

பர்மியத் தமிழர்கள் பற்றியத் தொடரின் 15 ஆவது பாகம்.