ஜனவரி 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 20, 2014, 05:43 PM

Subscribe

இன்றைய (20-01-2014) பிபிசி தமிழோசையில்,

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அளித்திருக்கும் சாட்சியம் குறித்த செய்தி;

இலங்கை போரினால் ஊனமுற்ற இலங்கை இராணுவத்தினர் சிலர் தங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய நிதி உதவிகளை பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுத்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது குறித்த செய்தி;

இலங்கையில் கஞ்சா பயிற்செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த செய்திகள்;

தனது அமைச்சரின் உத்தரவை கேட்க மறுத்த டெல்லி காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நடத்திவரும் தர்ணா தொடர்பான செய்திகள்;

இது குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.