ஜனவரி 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 22, 2014, 06:48 PM

Subscribe

இன்றைய (22-01-2014) பிபிசி தமிழோசையில்

இந்தியா இலங்கைக்கு இடையில் 27 ஆம் தேதி பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கும் நிலையில், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம் என்று இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ரவீந்திர கிருஷ்ணபிள்ளையின் குடும்பத்தவரின் கருத்துக்கள்;

இலங்கைக்கு சுற்றுலா சென்ற பிரிட்டிஷ் சுற்றுலா பயணி கொல்லப்பட்ட வழக்கில் பிரதானமாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்திகள்;

உகாண்டா நாட்டு பெண்களை மிரட்டியதாக கூறப்படும் புகார்கள் தொடர்பில் டில்லி சட்டத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து தமது ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வருகிவது பற்றிய செய்திகள்;

தமது ஜாதிக்கு வெளியே திருமணம் செய்துகொண்ட மகன்மீது தந்தை ஒருவர் இந்தியாவில் மானநஷ்ட வழக்கு தொடுத்திருப்பதுபற்றிய செய்தி;

புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகர் நாகேஸ்வர ராவ் இன்று காலை காலமானார். அவரது திரையுலக ஆளுமை பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு;

தமிழகத்தில் தேமுதிகவுடன் கூட்டணி கோரி முறையான அழைப்பை அனுப்பியிருப்பதாக திமுக தலைவர் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

சிரியாவில் தொடர்ந்து நீடிக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலான சர்வதேச சமாதான மாநாடு இன்று ஸ்விட்சர்லாந்தில் துவங்கியிருக்கும் நிலையில் அது பற்றிய பிபிசியின் நேரடி செய்திக்குறிப்பு ஆகியவற்றை கேட்கலம்.