ஜனவரி 24, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (24-01-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் நேற்றுமாலை திடீர் சுகவீனம் காரணமாக காலமான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதியை நிலைநாட்டுவதில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்துள்ளதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது குறித்த செய்திகள்;
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பாலியல் தொந்தரவுக்கு உட்பட மறுத்ததாலேயே பிரச்சனையில் சிக்கியதாக கூறும் அவரது குடும்பத்தவரின் கருத்துக்கள்;
இலங்கை கடற்படையினர் தம்மை கற்களால் தாக்குவதாக தெரிவிக்கும் தமிழக மீனவர்களின் கருத்துக்கள்;
மேற்கு வங்க மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து உத்தரவுப்படி கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் குறித்து நீதிபதி விசாரிக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள்;
டில்லியில் இருக்கும் உகாண்டா நாட்டுப்பெண்களை இரவுநேரத்தில் நேரில் சென்று மிரட்டி தாக்கியதாக கூறப்படும் புகாருக்கு உள்ளாகியிருக்கும் டில்லி மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, டில்லி மகளிர் ஆணையத்தின் விசாரணையில் இன்று ஆஜராகாததால் பெண் அமைப்புக்களிடம் எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்த செய்திகள்;
திமுகவின் உட்கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால், அந்த கட்சியின் தலைவர் மு கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி அந்த கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றை கேட்கலாம்.
