ஜனவரி 25, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 25, 2014, 04:52 PM

Subscribe

இன்றைய (25-01-2014) பிபிசி தமிழோசையில்

திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட, அந்த கட்சியின் தலைவர் மு கருணாநிதியின் மகனும் அந்த கட்சியின் தென்மண்டல செயலாளருமான மு க அழகிரி பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

இலங்கையில் 2012-13 ஆம் ஆண்டுகளில் விழுந்த விண்கல்லில் பூமிக்கு வெளியிலும் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கான மேலதிக சான்றுகள் கிடைத்திருப்பதாக கூறும் அந்த விண்கல்லை ஆராய்ந்த விஞ்ஞானியின் செவ்வி;

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் வெற்றிடங்களுக்கு புதிதாக வழங்கப்படவுள்ள நியமனங்களை இன விகிதாசார அடிப்படையில் ஆளணி சமப்படுத்தும் செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

சம்பூரில் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசு தனது புனர்வாழ்வுத் திட்டத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது குறித்த செய்தி;

அமெரிக்காவுடனான வருடாந்த இராணுவ ஒத்திகைக்கு தென்கொரியா தயாராகும் நிலையில், வடகொரியா அதனை நோக்கி சமாதானக் கரத்தை நீட்டியுள்ளது. நல்லிணக்கத்துக்கு வருமாறு அது அழைத்துள்ளது குறித்த செய்தி;

நிறைவாக பலகணி ஆகியவற்றை கேட்கலாம்.