ஜனவரி 27, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (27-01-2014) பிபிசி தமிழோசையில்
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை பற்றி சென்னையில் நடந்த பேச்சு வார்த்தைகள் "சுமுகமானதாகவும், பயனுள்ளதாகவும்" நடந்தன என்றும், இனி இரு நாட்டு அரசுகளும் முடிவெடுக்கும் என்றும் மீனவர் தலைவர்கள் கூறியிருப்பது குறித்த செய்திகள்;
இந்தப் பேச்சுவார்த்தைகளில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை மீன்வள அமைச்சின் ஆலோசக சபை உறுப்பினரும், இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கான அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளருமான, எஸ்.பி.அந்தோனிமுத்து அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்காலக் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இலங்கையின் வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, துப்பாக்கிச் சூடுவரை சென்றதுமான ரதுபஸ்வல ஆலையை மூடிவிடுவதற்கு சம்மதம் தெரிவித்து இலங்கை அரசு நீதிமன்றதில் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
கேரளாவில் ஒரு பெண் வழக்கறிஞர் பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்த செய்திகள்;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
