ஜனவரி 29, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (29-01-2014) பிபிசி தமிழோசையில்
உலகில் அனைத்து சிறார்களும் ஆரம்பப் பள்ளிக் கல்வியை பெறுவதற்கு இன்னமும் 70 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகும் என்று ஐநா கூறியுள்ள பின்னணியில் இலங்கையின் மலையக கல்விநிலைமை குறித்த செவ்வி;
இந்திய வீட்டுத் திட்டத்தில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாததை கண்டித்து வவுனியாவில் மீள்குடியேறிய மக்கள் நடத்தியிருக்கும் போராட்டம் குறித்த செய்தி;
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம்கள் காணாமல் போனமை தொடர்பில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரிக்கக் கோரும் பிரேரணை நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனும் திமுக பொருளாளருமான மு க ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி திமுகவின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி ஆர் பாலு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து டி ஆர் பாலு பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி
இன்றைய பலகணியில், சர்ச்சையை ஏற்படுத்திய சாப்பாட்டுக்கடை- பாகிஸ்தானில் உணவகம் ஒன்றைத் தொடங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரெஞ்சு நாட்டு சமையல் கலைஞர் பற்றிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
