ஜனவரி 31, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (31-01-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை சென்றுள்ள அமெரிக்க அதிகாரி நிஷா பிஸ்வாலிடம், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் செயற்பாடுகள் பற்றி இலங்கை அரசு புகார் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
அமெரிக்க அதிகாரியை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் செவ்வி;
இந்திய நிதிஉதவியுடன் இலங்கையின் வடக்கே கட்டப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறையின் விசேட செயலர் சுஜாதா மேத்தா, இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிக செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வினய்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வடபகுதியில் இரண்டு நாட்கள் நேரில் சென்று பார்வையிட்ட பிறகு, இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு இது குறித்து பல்வேறு தரப்பினருடனும் விவாதித்தது குறித்து இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;
இலங்கையின் கிழக்கு மாகாண எழுத்தர் ( குமாஸ்தா) பணி நியமனம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறும் ஒரு சாரார் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது குறித்த செய்திகள்;
ஹரியானா போன்ற வட இந்திய மாநிலங்களில் சாதி மீறி காதல் திருமணம் செய்யும் பெண்களுக்கெதிராக, அதுவும், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்களுக்கு எதிராக மிக மோசமான தண்டனை தரும் காப் பஞ்சாயத்துக்கள் எனப்படும் கட்டப்பஞ்சாயத்துக்களை தடை செய்ய முடியாது என்று ஹரியானா தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த காப் பஞ்சாயத்துக்களுக்கு ஒரு கலாச்சார தேவை இருப்பதாகவும் கூறியிருக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து அகில இந்திய மாதர் சங்கத்தைச் சேர்ந்த வாசுகி உமாநாத்தின் பேட்டி;
முதல் உலகப்போரின் நூற்றாண்டு நினைவுகூறலின் ஒரு பகுதியாக Freedom2014 அதாவது 2014இல் சுதந்திரம் என்கிற தலைப்பில் இன்றைய நிலையில் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன? நிலை என்ன? என்பதை ஆராயும்விதமாக பிபிசியின் உலகசேவை பல்வேறு செய்திகளை, செய்தித்தொகுப்புக்களை ஒலிபரப்பவிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தாய்லாந்து மீன்பிடி தொழிலில் கொத்தடிமைகளாக இருக்கும் பர்மிய தொழிலாளிகளின் நிலையை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
