காப் பஞ்சாயத்து: கேஜ்ரிவால் கருத்தால் சர்ச்சை
Share
Subscribe
ஹரியானா போன்ற வட மாநிலங்களில் ஜாட் சமுதாயத்தவர் நடத்தும் காப் பஞ்சாயத்துக்கள், சாதி மாறித் திருமணம் செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்குவது போன்ற, சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத தீர்ப்புகளை வழங்கிவருவது, தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
இந்த நிலையில், ஹரியானா தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த காப் பஞ்சாயத்துக்களைத் தடை செய்யவேண்டும் என்று தாம் கோரப்போவதில்லை என்றும், அவைகளுக்கு ஒரு கலாசார தேவை இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பெண்களுக்கெதிராக, அதுவும், தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக இந்த காப் பஞ்சாயத்துக்கள் இயங்கிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரது இந்த கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை என்கிறார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த வாசுகி உமாநாத்.
