பிப்ரவரி 1, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-02-2014) பிபிசி தமிழோசையில்,
இலங்கை சென்றுள்ள அமெரிக்க அதிகாரி நிஷா பிஸ்வால் தமது பயணத்தின் முடிவில் போருக்குப்பிறகான இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்துவதில் இலங்கை அரசு போதுமான முன்னேற்றம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;
இவர் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவரை சந்தித்த அரசியல் மற்றும் சிவில்சமூகத் தலைவர்களின் கருத்துக்கள்;
இலங்கையில் மலைய மக்கள் பொலிஸ் நிலையங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக மலையக தமிழ் இளைஞர்களையும் போலிஸில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசைக்கு அளித்திருக்கும் செவ்வி;
இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவன் இந்தியத் தலைநகர் டில்லியில் தாக்கப்பட்டு இறந்ததை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தியிருக்கும் பின்னணியில் டில்லியில் இனவிரோத மனப்பான்மை நிலவுகிறதா என்பது குறித்த ஆய்வு;
மொஹஞ்ஜோதாரோ பாரம்பரிய இடத்தின் ஒரு பகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி கலாசார விழா ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பதை தடுக்குமாறு அந்த நாட்டின் பாரம்பரிய சின்ன பாதுகாப்பாளர்கள் யுனெஸ்கோ அமைப்பைக் கோரியுள்ளது குறித்த செய்தி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
