பிப்ரவரி 5, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (05-02-2014) பிபிசி தமிழோசையில்
சிறார்களைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியார்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை பாதுகாப்பதாக ஐ.நா மன்றதின் குழு கண்டனம் செய்திருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் பாலின் கொள்முதல் விலையை ஏற்றவேண்டும் என்பது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுதல் நடத்திவரும் போராட்டம் குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கே ஏ செங்கோட்டுவேலின் பேட்டி;
இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மூன்றாவது அணி அமைப்பது தொடர்பில் இன்று டில்லியில் கூடிய அரசியல் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.வரதராஜனின் பேட்டி;
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதற்காக இலங்கை தூதரை இந்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருப்பது குறித்த செய்தி
இலங்கையின் ஒலுவில் கேசன்கேணிப்பகுதியில் ராணுவம் கையகப்படுத்தவிருக்கும் நிலத்துக்கு சொந்தக்காரர்களுக்கு விவசாய நிலங்களையே அரசு வழங்கவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 9 தமிழ்க் கைதிகள் இன்று குச்சவெளி நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளது குறித்த தகவல்கள்;
நிறைவாக இன்றைய பலகணியில் இலங்கையில் அரச நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் தமிழ் மொழி எழுதப்படும் விதம் பற்றிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
