பிப்ரவரி 7, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (07-02-2014) பிபிசி தமிழோசையில்,
தமிழக தலைநகர் சென்னையில் பாலியல் தொழில் செய்வதற்கு தனி இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டிருப்பது குறித்த செவ்வி;
இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென கூறும் பாரதீயஜனதா கட்சியின் மகளிர் தலைவி தமிழிசை சவுந்திரராஜனின் கருத்துக்கள்;
இந்தியாவில் பிபிசி லாட்டரி என்கிற பெயரில் நடக்கும் மோசடி குறித்த செய்தி;
ரஷ்யாவிலிருக்கும் சோச்சி நகரில் இன்று தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருப்பது ஏன் என்பதை விளக்கும் செய்தி;
திருகோணமலை பிரதேசத்தில் கத்தோலிக்க நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை இலங்கை விமானப்படை கையகப்படுத்துவதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இறந்தவர்களின் கண்களில் இருந்து எடுக்கப்பட்ட செல்களில் இருந்து கண்பார்வையற்றவர்களுக்கு பார்வை கொடுக்க முடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
சீனாவின் பாரம்பரிய இசையை உலக மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு எடுத்துவரும் முன்னெடுப்புக்கள் பலனளிக்குமா என்பதை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
