பிப்ரவரி 12, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 12, 2014, 05:41 PM

Subscribe

இன்றைய (12-02-2014) பிபிசி தமிழோசையில்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதை, இலங்கைப் பத்திரிகையாளர்கள் குழுவினர் இன்று சந்தித்து பேசியுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையில் வடமாகாணத்திற்கு இன்று சென்றிருந்த இலங்கைக்கான நோர்வே தூதுவரின் சந்திப்புக்கள் குறித்த செய்திகள்;

இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு படகு மூலம் சட்ட விரோதமாக செல்ல முயன்றதாக 75 பேர் இன்று புதன்கிழமை அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

ஒடிஷா மாநிலத்தில் இரும்புத் தாது கனிம அகழ்வு மற்றும் ஏற்றுமதி குறித்து ஆராய்ந்த முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான குழு ஒரிசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்படுவதை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்றும் அங்கு தோண்டியெடுக்கப்படும் இரும்புத் தாதுவுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒடிஷாவில் இரும்புத் தாது ஏற்றுமதியை நிறுத்துகின்ற எண்ணமோ உற்பத்தி உச்சவரம்பு நிர்ணயிக்கின்ற எண்ணமோ அரசாங்கத்துக்கு இல்லை என்று இந்தியாவின் கனிம வள அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது. இந்த முரண்பட்ட முடிவுகள் குறித்து இந்திய கனிம வள அமைச்சின் கூற்று பற்றி சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல விவகாரங்கள் ஆர்வலரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயத்தின் செவ்வி;

“ஹிந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற புத்தகத்துக்கு இந்துக்கள் சிலர் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பு சரியா என்பது குறித்து இந்த புத்தகத்தை திறனாய்வு செய்த டாக்டர் ஏ.ஆர்.வெங்கடாசலபதியின் செவ்வி

பலகணியில் கொழும்பு பிச்சைக்காரர்கள் சமீபத்திய கைதுகளும் அவர்களின் புனர்வாழ்வும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.