பிப்ரவரி 14, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (14-02-2013) பிபிசி தமிழோசையில்,
டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஊழலை எதிர்ப்பதற்கான ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முற்பட்டபோது அது நடக்காமல் போனதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பது குறித்த செய்திகள்;
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சந்தின்போது தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தாது மணல் கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியாவில் நிலவும் இனவாதம் குறித்த பெட்டகம்,
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு தனது நான்குநாள் விசாரணைகளை இன்று யாழ்ப்பாணத்தில் துவங்கியிருப்பது குறித்த செய்திகள்;
வங்கதேசத்தில் இருக்கும் பர்மாவைச் சேர்ந்த ரோஹிங்ஞா முஸ்லிம்களை கணக்கெடுக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்திருப்பது குறித்த செய்திகள்;
வைட்டமின் சி அதிகம் இருக்கும் உணவுகளை உட்கொண்டால் அது புற்றுநோயாளர்களின் சிகிச்சையில் கூடுதல் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
