“தமிழக வளர்ச்சியின் வீழ்ச்சிக்கு மின்தட்டுப்பாடு முக்கிய காரணம்”
Share
Subscribe
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் 2014-15ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வியாழனன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இருக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2012-13ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிதான் மிகவும் குறைவானதாக, அதாவது 4.14 சதவீதமாக இருந்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 4.9 சதவீதத்தை விட குறைவாகும். தமிழக வளர்ச்சிவிகிதம் இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்ததற்கு மோசமான நீர்மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தியில் தமிழக அரசு உரிய முதலீடு செய்யாமை ஆகிய இரண்டுமே முக்கியமான காரணங்கள் என்று பிபிசி தமிழோசையிடம் விவரித்தார் சென்னைப் பல்கலைக்கழக பொருளாதார புள்ளியியல் துறை பேராசிரியரும், தமிழ்நாட்டு திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஆர் சீனிவாசன்
