பிப்ரவரி 15, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-02-2014) பிபிசி தமிழோசையில்
மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நாட்டின் முக்கிய அறிவுஜீவிகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய இலங்கையின் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை என்று தெரிவித்திருப்பது குறித்து அவரது செவ்வி;
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட இலங்கை மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடபகுதி இலங்கை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஆர்பாட்டம் குறித்த செய்திகள்;
இலங்கையின் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பு காரணமாக மூன்று வாரங்களுக்கு மேலாக காகித உற்பத்தி தடைப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;
டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருப்பது அவரது ஆம் ஆத்மி கட்சிக்கு அரசியல் ரீதியில் சாதகமா பாதகமா என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
ஆம் ஆத்மி கட்சியின் பதவி விலகல் குறித்து டில்லி மக்களின் கருத்துக்கள்;
தென்னிந்திய மாநிலமான ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலங்கானா என்கிற புதிய மாநிலத்தைத் தோற்றுவிப்பதற்கான மசோதாவை இந்திய நடுவணரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இதை எதிர்த்து ஆந்திராவின் ஒரு பகுதியான சீமாந்திரா பகுதியில் பந்த் நடந்துவருகிறது. அங்குள்ள இன்றைய நிலைமைகள் குறித்த நேரடி செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
