ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க கூடாது: பாதிக்கப்பட்ட குடும்பம்

Feb 20, 2014, 07:24 PM

Subscribe

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு, இன்னமும் சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை, ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள்.

இப்படி எதிர்ப்பவர்களின் ஒருவர் லீக் மோகன். 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரது தந்தை லீக் முனுசாமியும் கொல்லப்பட்டார். இந்த ஏழுபேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து அவர் பிபிசி தமிழோசையிடம் விளக்கும் அவரது விரிவான செவ்வி.