பிப்ரவரி 21, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (21-02-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் வடக்கே ராணுவத்தில் சேருமாறு பெண்கள் மீண்டும் வற்புறுத்தப்படுவதாக எழுந்திருக்கும் புதிய குற்றச்சாட்டுக்கள் பற்றிய செய்திகள்;
ஐநாமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழியவேண்டும் என்று திமுக இந்திய பிரதமரிடம் கோரியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்ட நாடாளுமன்றத் தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என்று முன்னர் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடைசெய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;
ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழியவேண்டும் என்று திமுகவின் சார்பில் இந்திய பிரதமரிடம் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திகள்;
ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்; பாஜகசார்பில் இந்திய பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படும் நரேந்திரமோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி ஆதாரம் தொடர்பில் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது குறித்த செய்திகள்;
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கும் பின்னணியில், இன்று வெள்ளிக்கிழமை ஆந்திரமாநிலத்தின் நிலைமைகள் என்ன என்பது குறித்த நேரடி தகவல்கள்;
சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளபோதிலும், திபெத்திய ஆன்மீக தலைவராக தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கவுள்ளது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
