பிப்ரவரி 26, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 26, 2014, 04:32 PM

Subscribe

இன்றைய (26-02-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை கடற்பரப்பில் சீனடிராலர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் புகார் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் மற்றும் இந்த புகாருக்கு இலங்கை அரசின் மறுப்பு;

ஆந்திர கரையோரப் பகுதியில் எண்ணூறுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் ஒரே நேரத்தில் செத்துக் கரையொதுங்கியுள்ள நிலையில், கடல் ஆமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த ஒரு செவ்வி;

இந்தியாவின் பெருவர்த்தக நிறுவன்ங்களில் ஒன்றான சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய்க்கு, ஜாமீனில் வெளிவர இயலாத கைது உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது குறித்த செய்தி;

இந்தியாவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்திய நகை வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் விடுத்திருக்கும் கோரிக்கைக்கான காரணம் என்ன என்பது குறித்து கோவை தங்கநகை தயாரிப்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவின் செவ்வி;

இந்தியாவில் தங்கத்திற்கான இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் கோரிக்கைகள் எழுந்திருக்கும் பின்னணியில் துபாயின் மாபெரும் தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனத்தின்மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டுக்களின் பின்னணி குறித்து பிபிசியின் செய்திக்குறிப்பு;

இன்றைய பலகணியில் குவாந்தனாமோ குடா சிறைக்கு சென்று திரும்பியவர்களின் மறுவாழ்வு பற்றிய பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.