பிப்ரவரி 28, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (28-02-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைகுழுவில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோண் கெரி தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
ஐநாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை தமிழர் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அரசு நிலையெடுக்கும் என்று இந்திகப்பல்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி கே வாசன் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டில், மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்திற்காக வீடொன்றில் தோண்டியபோது ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் விவசாய இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு தொடர்பான கொள்கைகளை இலங்கை அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது குறித்த செய்திகள்;
இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான, சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பத் தரவில்லை என்கிற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
உக்ரெய்னின் புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய செய்தித் தொகுப்பு;
நிறைவாக பிபிசி தமிழோசையின் சென்னை செய்தியாளர் டி என் கோபாலன் இன்றுடன் தனது பிபிசி தமிழோசை பணியிலிருந்து ஓய்வு பெறுவதை ஒட்டி கடந்த 15 ஆண்டுகளாக பிபிசி தமிழோசை பணி குறித்து அவரது நினைவுகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
