பணி ஓய்வு பெறுகிறார் சென்னை செய்தியாளர் டி.என்.கோபாலன்

Feb 28, 2014, 05:55 PM

Subscribe

நேயர்களே இன்றுடன் நமது சென்னை செய்தியாளர் டி.என்.கோபாலன் பதவி ஓய்வு பெற்றுச் செல்கிறார். 1998லிருந்து தமிழோசையின் செய்தியாளராக சென்னையிலிருந்து பணியாற்றிய கோபாலன், தமிழோசையில் பணிபுரிந்த பல ஆண்டுகளில் , பல்வேறு நடப்புச் செய்திகளோடு, பல சிறப்புத் தொடர்களையும் தந்தவர்.

தமிழகத்தில் தலித்துகளின் நிலை, தமிழக முஸ்லீம்களின் பிரச்சினைகள் குறித்த அவரது தொடர்கள் நேயர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. அரசியல் செய்திகள் மட்டுமின்றி, கலை கலாசாரத்துறையிலும் அவர் தனது ஆர்வத்தைப் பயன்படுத்தி திறம்பட செய்திகளைத் தந்தார். தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி குறித்து, அவர் தயாரித்தளித்த காயாத கானகத்தே தொடர் நேயர்களுக்கு நினைவிருக்கலாம்.

பல ஆண்டுகள் இதழியல் மற்றும் ஒலிபரப்பு சேவையில் பணியாற்றி ஓய்வு பெறும் டி.என்.கோபாலனுக்கு நமது வாழ்த்துக்கள்.