மார்ச் 2, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (02-013-2014) பிபிசி தமிழோசையில்
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக தமிழக விசைப்படகு உரிமையாளர்கள், தற்போது மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளதை எதிர்க்கும் இலங்கை மீனவர்களின் கருத்துக்கள்;
கொழும்பு மகசீன் சிறையில்உயிரிழந்த கோபிதாசின் மரணத்திற்கு நீதியான விசாரணையொன்றைக் கோரி இன்று நடந்த அவருடைய இறுதிக்கிரியையின்போது ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது குறித்த செய்தி;
தஞ்சை தமிழ்ப் பலகலைக்கழகத்தில் ஜோதிடம் பட்டயப் படிப்புக்கான ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருப்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரின் பதில்கள்;
ஊழல் ஒழிப்பு மற்றும் தலித் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அவசர சட்டங்களை இந்திய குடியரசுத்தலைவர் இன்றோ நாளையோ வெளியிடக்கூடும் என்று பரவலாக ஊடகங்கள் எதிர்வு கூறிவருகின்றன. ஆனால் இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே வரதராஜனின் செவ்வி;
பிபிசி தமிழோசையில் தொடர்ந்து ஒலிபரப்பாகிவரும் “பிபிசி உலகசேவையின் சுதந்திரம் 2014” என்கிற நிகழ்ச்சித்தொகுப்புக்களில் ஒன்றாக அர்ஜெண்டினா நாடு மீண்டும் ஜனநாயக பாதைக்குத் திரும்பியதன் 30 ஆவது ஆண்டுவிழாவை சமீபத்தில் கொண்டாடியிருக்கும் பின்னணியில், அதற்கு முன்பு அங்கே நிலவிய ராணுவ ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சூழலில் இசையும் பாடல்களும் எப்படி அந்நாட்டின் ஜனநாயக குரலாக ஓங்கி ஒலித்து வந்தது என்பதை விவரிக்கும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
