மார்ச் 3, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 03, 2014, 05:20 PM

Subscribe

இன்றைய (03-03-2014) பிபிசி தமிழோசையில்

யுக்ரைனின் நிலைமைகள் தொடர்ந்து கொதிநிலையிலேயே நீடிக்கும் சூழலில், ரஷ்யா, மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய முக்கோண மோதலின் பின்னணியை அலசும் ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையின் வடக்கே திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளது குறித்த செய்திகள்;

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக, ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்திருப்பது குறித்த செய்தி;

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இந்த வழக்கு விசாரணை இந்திய பள்ளிகள் மத்தியிலும் சமூகமட்டத்திலும் உரிய மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்று, சென்னையில் எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர்கள் மத்தியில் பணிபுரியும் ஒய் ஆர் ஜி கேர் எனப்படும் தொண்டுநிறுவனத்தின் திட்ட மேலாளர் ஏ கே கணேசனின் செவ்வி;

எச் ஐ வி தொற்றுக்குள்ளான ஒரு குழந்தையின் தாயார் ஒருவரிடம் அவரது அனுபவம் குறித்த செவ்வி

ஹாலிவுட் உலகின் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், உலக அளவில் ஆங்கிலம் முதல் மொழியாகப் பேசும் நாடுகளைத் தவிர, பிற நாடுகளிலும், ஹாலிவுட் ஒரு பெரிய வெகுஜன கலாசார சக்தியாக வளர்ந்திருக்கிறதா, அது உள்ளூர் கலாசார வெளியை எந்த அளவுக்கு ஆக்ரமித்திருக்கிறது என்பது குறித்து இந்திய திரைப்பட விமர்சகர் தியொடர் பாஸ்கரனிடம் ஆய்வுச் செவ்வி;

விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.