மார்ச் 05 - தமிழோசை நிகழ்ச்சிகள்..
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,
முதலில் செய்தி அறிக்கை,
பின்னர் தொடரும் செய்தி அரங்கில்
*இந்திய நாடாளுமன்றத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி,
*திமுக கூட்டணிப் பேச்சு வார்த்தை குறித்த செய்திகள்,
*அதிமுக கூட்டணியில் இடம்பெறக் காத்திருக்கும் இடது சாரிகள் தொகுதிப் பங்கீடு குறித்து முன்னேற்றம் ஏதும் ஏற்படாத சூழலில், அவர்களது தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்து,
*ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் முன்வரைவு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்து,
*இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக கூறப்படும் இடத்தை மேலும் தோண்டுவதைத் தற்போது நிறுத்திவைப்பதாக எடுக்கப்பட்ட முடிவு குறித்த செய்தி
*காணாமல் போனவரை குறிப்பதற்கான தனியான சான்றிதழ் தர இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்.
