மார்ச் 7, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 07, 2014, 05:40 PM

Subscribe

இன்றைய (07-03-2014) பிபிசி தமிழோசையில்

யுக்ரைனின் நிலைமைகள் தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில், யூக்ரைனில் அதிபர் விக்டர் யானுகோவிச் ஆட்சியை கவிழ்த்தவர்கள் புதிய பாசிஸ்ட்டுகள் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இணையமாட்டார்கள் என்று கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள்;

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் பதவிக்கு வருவதற்கு தாம் முழுமையாக ஆதரவு தருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்துவைத்திருக்க வேண்டும் என இக்கருவிகளையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனையிட்டு சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தினுடைய இந்தியக் கிளையின் தலைவர் மணி மணிவண்ணனின் செவ்வி;

இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கான நீண்டநாள் பிரச்சனையாக நீடிக்கும் மோசமான தபால் சேவையை மேம்படுத்த இலங்கை அரசு முன்னெடுக்கும் தீர்வு உரிய பலன் அளிக்குமா என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைபுனரமைப்பு பணிகள் பொதுமக்களுக்கு பயன்படுவதற்கு பதில் புதிய பிரச்சனைகளை தோற்றுவிப்பதாக புகார் எழுந்துள்ளது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.