மார்ச் 8, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-03-2014) பிபிசி தமிழோசையில்
சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 239 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கருதப்படுவதை ஒட்டி பாதிக்கப்பட்ட விமானத்தை தேடும் பணிகள் தொடர்வது குறித்த செய்திகள்;
இலங்கையின் வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் அங்குள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மான முன்வரைவு பற்றி நாடுகளுக்கிடையில் நடந்திருக்கும் அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் குறித்த செய்திகள்
வட இந்தியாவில் இமய மலைக்கு அடிவாரத்தில் இது வரையில் கிட்டதட்ட பத்து பேரை கொன்றுள்ள புலியை பிடிப்பதற்காக அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகள் குறித்த நேரடி கள நிலவரத்தை விளக்கும் செய்திக்குறிப்பு;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
