மார்ச் 9, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (09-03-2014) பிபிசி தமிழோசையில்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை அமெரிக்காவுடன் இணைந்து மொரீஷியஸ் முன்மொழிவது ஏன் என்பது குறித்து மொரீஷியஸ் அமைச்சரின் செவ்வி;
ஜெனீவாவில் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை நகரில் ஜனாதிபதிக்கு ஆதரவாக தமிழ் மக்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளது குறித்த செய்திகள்;
மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் என அந்த நிலங்களுக்கு சொந்தமானவர்கள் நடத்தியிருக்கும் போராட்டம் குறித்த செய்திகள்
சென்னையில் இன்று அரங்கேறவிருந்த நாடகம் ஒன்றுக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது குறித்து அந்த நாடக குழுவின் கருத்துக்கள்;
தமிழ்நாட்டின் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் அதிலிருந்து விலகிவிட்டநிலையில் அந்த கட்சிகள் அடுத்து திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா பிபிசி தமிழோசைக்கு அளித்த பதில்;
காணாமல்போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிட்ட பாதையில் இருந்து திரும்பிச் சென்றிருக்கலாம் என ராடார் சிக்னல் தரவுகள் காட்டியிருக்கும் பின்னணியில் இது குறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தமிழ்ப் பெண் வனிதா சுபயா பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் மேலதிக தகவல்கள் ஆகியவற்றை கேட்கலாம்.
