மார்ச் 10, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (10-03-2014) பிபிசி தமிழோசையில்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்படவிருக்கும் தீர்மான முன்வரைவு மீதான அதிகாரபூர்வமற்ற விவாதங்களின் இன்றைய நிலைமைகள் குறித்த செய்திகள்;
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா முன் மொழிந்திருக்கும் தீர்மானத்தை ஆதரிப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் பாலியல் வல்லுறவுகள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறும் புதிய காணொளி ஒன்றை பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்;
இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருப்பது குறித்த செய்திகள்;
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சந்திரிகா ஷர்மா, சென்னையில் இருந்து இயங்கும் மீனவ தொழிலார்களுக்கான சர்வதேச ஆதரவு குழு என்கிற அமைப்பின் தலைமை அதிகாரியாக பணிபுரிபவர். அவரை பற்றி அவரது சக பணியாளார் கார்த்திகேயன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி;
சீனாவில் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கின்ற காலகட்டத்தில் தலைநகருக்குள் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து மத்திய அரசாங்கத்திடம் புகார் மனு கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் செய்யும் முயற்சிகள் குறித்து சீனாவில் இருந்து பிபிசியின் மார்ட்டின் பேடியன்ஸ் வழங்கிய பெட்டகத்தின் தமிழ் வடிவம் ஆகியவற்றை கேட்கலாம்.
